தென்காசி, மே, 25,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் தாயின் மடியில் சமூக அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் கொரோனா தொற்று காலம் முதல் இன்றுவரையில் தாயின் மடியில் சமூக அறக்கட்டளையின் மூலம் ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று நாள்தோறும் உணவு வழங்கியும், பண்டிகை காலங்களில் இலவச வேஷ்டி சேலை வழங்கியும் சேவையாற்றி வரும் இந்த அறக்கட்டளைக்கு அலுவலகம் மற்றும் உணவுக்கூடம், விநாயகர் கோவில் பிரதிஷ்டை விழா கற்குடி கிராமம் நீலிஅம்மன் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தில் வைத்து நடந்தது.
இந்த விழாவிற்கு தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீ அகிலானந்தமகராஜ் தலைமைதாங்கினார்.
கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனா் பொறியாளா் எல்எம்.முரளி ஆகியோர் முன்னிலைவகித்தார். தாயின் மடியில் சமூக அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
புதிய அலுவலகத்தை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி தாளாளா் செ.ராம்மோகன் திறந்து வைத்தார். பள்ளி முதல்வா் ராணிராம்மோகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
ஐந்தருவி சாரதா ஆசிரம நிர்வாகி ஆத்மப்ரியாஅம்பாள் சிறப்பு பிராத்தனை செய்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டி மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.