சேலம் 5ரோட்டை புறக்கணித்து வரும் பஸ் ஓட்டுநர்கள் பயணிகளை இறக்கி விடாமல் பாலத்தின் மேலேயே செல்வதால் இந்த பகுதிக்கு வருவோருக்கு பாதிப்பு
சேலத்தில் மிகவும் முக்கியமான பகுதி 5ரோடு பகுதி ஆகும். சேலத்தின் மத்திய பகுதியாகவும் ஐந்து ரோடு உள்ளது. சேலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டூர் ஓமலூர் தர்மபுரி கிருஷ்ணகிரி பெங்களூரு ஏற்காடு ஜங்ஷன் போன்ற பகுதிகளுக்கு ஐந்து ரோடு சந்திப்பு மிகவும் பிரதானமான இடமாக உள்ளது. சேலம் பஸ் ஸ்டாண்ட் டில் இருந்து வெளியூர் செல்லும் எல்லா பஸ்களும் பயணிகள் அதிகமான பேர் ஏறும் இடமான ஐந்து ரோடு வழியாக த்தான் மேற்சொன்ன வெளியூர்களுக்கு போய் வருகிறது.
வெளியூர் போகும் போது இங்கு வரும் பஸ்கள் திரும்ப வரும் போது ஐந்து ரோடு பகுதியில் பயணிகளை இறக்கி விடாமல் ஐந்து ரோடு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பாலத்தின் மேலேயே சேலம் பஸ் ஸ்டாண்ட் டிற்கு போய் விடுகிறது. இதனால் ஐந்து ரோடு பகுதிக்கு போவார்கள் முந்தைய பஸ் நிறுத்தத்திலும் ஐந்து ரோடு பகுதியின் மேல் செல்லும் பாலம் துவங்கும் இடத்திலும் இறக்கி விடுகின்றனர்.
இதனால் இங்கிருந்து ஐந்து ரோடு பகுதி க்கு நடந்து வரவும் சிலர் ஆட்டோ விலும் செல்ல க் கூடிய நிலையில் தற்போது உள்ளது இதனால் வெளியூரில் இருந்து சேலம் ஐந்து ரோடு பகுதி க்கு வருவோர் தினசரி பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
பல தடவைகள் தினமும் பயணிகளுக்கும் பஸ் நடத்துனர் களுக்கும் இதனால்வாக்கு வாதம் நடக்கிறது. அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் தான் ஐந்து ரோடு வராமல் அதிகமாக பாலத்தின் மேலேயே சேலம்பஸ் ஸ்டாண்ட் போகிறது.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பஸ் ஓட்டுநர் நடத்துநர் களிடம் கேட்டால் நேரம் இல்லாததால் ஐந்து ரோடு வராமல் பாலத்தின் மேலேயே பஸ் ஸ்டாண்ட் போகிறோம் என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்த காரணம் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. இந்த பாலம் கட்டும் முன்பு வரை இந்த ஐந்து ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் சென்ற பஸ்கள் இப்போது கூறும் இந்த காரணம் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை