கோவை கொடிசியா அரங்கில் இரு நாட்கள் நடைபெற உள்ள – இந்திய ராணுவத்தில் பயன்படுத்தபடும் பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள், உள்நாட்டில் தயாரிக்க படுகின்ற பாதுகாப்பு துறை உபகரணங்கள் சார்ந்த கண்காட்சி.
கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் கொடிசியா இயக்குனர்கள் சசிக்குமார்,சுந்தரம், பொண்ராம் ஆகியோர் கூறியதாவது.
இந்திய இரானுவ துறையுடன் கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் இணைந்து சதர்ன் ஸ்டார் ஆர்மி அகாடமி இண்டஸ்ட்ரி இன்டர்பேஸ் எனும் இரானுவ தொழில் உபகரணங்கள் கண்காட்சி
கோவை கொடிசியா அரங்கில் இம்மாதம்”28 மற்றும் 29″ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா இரானுவத்தின் தக்சின் பாரத் ஏரியா எனும் தென்னிந்திய பிரிவின் கீழ் நடைபெற உள்ளது.
இதில் நமது நாட்டில் தயாராகும் பாதுகாப்பு துறை உபகரணங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும்
இந்தியா தனது ராணுவ தளவாட உற்பத்தியில் முழு நிறைவு பெறுவதை நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இக்கண்காட்சி அமைய உள்ளது.
இதில் இந்திய ராணுவத்தில் தொடர்புடைய, ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்துவதுடன் ராணுவ தளவாட தொழில் சார்ந்த உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த உள்ளதாகவும்
இந்திய ராணுவம், கல்வி, மற்றும் தொழில் துறையினர் மூவரும் ஒன்றிணைந்து இம்முயற்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்
இக்கண்காட்சியில் இந்திய தரைப்படை – இந்திய விமானப்படை – இந்திய கப்பல் படை – , நிதி ஆயோக் – தொழில் துறை – தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் – முக்கிய அரசு துறை – கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் சீர்மிகு பெருமைகளை கண்டறிய இவ்வாறு தெரிவித்ததை அடுத்து
கண்காட்சி குறித்த விளம்பர அட்டைகளையும் வெளியிட்டனர்.