வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரத் தொழிலாளர் யூனியன் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், தமிழ்நாடு காங்கிர தொழிலாளர் யூனியன் டிசிடியு சார்பில் முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு டிசி டியூ தொழில் சங்க திருவாரூர்மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் தலைமையில், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் துணைச் செயலாளர் விஜயகாந்த், மாணவர் காங்கிரஸ் நகரத் தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது,
அனைவராலும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இஸ்மத், சபீர், வலங்கைமான் வட்டார சேவா தள தலைவர் கே. என்.ஆர். இளங்கோவன் உள்பட காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் மாணவர் காங்கிரஸ் குகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.