எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் பகுதியில் தனியார் இடத்தில் அனுமதியின்றி சவுடு மணல் எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டிருந்த வாகனங்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் தப்பி சென்றனர். அங்கு விட்டு சென்ற மணலுடன் நின்ற லாரியையும் மணல் ஏற்ற பயன்படுத்த ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் வீரமணி அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுனர்களை போலீசார் தேடி வருகின்றனர்.