தாராபுரம் செய்தியாளர் பிரபு
தாராபுரம்:உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் மறைமுகமாக 25,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன மேலும் 110,குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர் .
இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதற்கிடையில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா அரசு உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவகுமார் முன்னிலையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கேரளா அரசை கண்டித்தும் மத்திய மோடி அரசை கண்டித்தும் தடுப்பனை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டுமென
தாராபுரம்,உடுமலை, மடத்துக்குளம்,கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
100, மேற்பட்ட விசிகவினர். உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் பலர் இந்த
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விசிக தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மண்டல துணைச் செயலாளர் ஜல்லிப்பட்டி முருகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பேட்டி:திரு,வேலு சிவகுமார்.
விவசாய பாதுகாப்பு இயக்கம் மாநில துணைச் செயலாளர்.