ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ் ஜெயக்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கையால் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மற்றும் மணல் கடத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார் மற்றும் நன்னிலம் நகர காவல் ஆய்வாளர் ரேகா ராணி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் தொடர்ந்து கஞ்சா குட்கா புகையிலை பொருள்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் இன்று நன்னிலம் நகர காவல் ஆய்வாளர் ரேகா ராணி அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் மாப்பிள்ளை குப்பம் பிடாரி கோவிலை சேர்ந்த சக்கரபாணி என்பவரது மகன் சிங்காரவேலு என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் அவரது கடையிலிருந்து குட்கா புகையிலை மற்றும் பான் மசாலா குமார் 22 கிலோ 76 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர் அந்த விற்பனைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய சிங்காரவேலுவை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பான் மசாலா வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார் அந்த வழக்கில் பிடி கட்டளையும் நிலுவையில் உள்ளது குட்கா புகையிலை பொருள்கள் தொடர்ந்து விற்பனை செய்பவர் என்றால் அவர் மீது குண்டர் சட்டம் அதாவது தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்