நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அரங்கத்தில் நடைபெற்றது.
திமுக மாவட்ட அவைத் தலைவர் திரு.சி.மணிமாறன் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணை செயலாளருமான திரு.கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் மாநில முதல் உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார் சிறப்புரை ஆற்றிப் பேசினார். அப்போது,முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்,நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் முகவர்கள் பணிகளை அதற்கான நியமிக்கப்பட்டவர்கள் சிறப்பாக செய்திட வேண்டும், KRN. ராஜேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.