ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
100 நாள் வேலைத்திட்டம் பயோ மெட்ரிக் முறை
பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை அமல் தலைமை ஒருங்கிணைப்பாளர்
பருத்தி சேரி ராஜா நன்றி பாராட்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும்,விவசாயம் நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள் கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது
இத்திட்டத்தின் சிறப்பு ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது இத்திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய ENMR (நிழற்படம்) முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது
சில கிராம ஊராட்சிகளில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்யும் நிழற்படம் எடுக்கப்படாமலும் , பணியாளர்கள் பணித்தளத்திற்கு வேலைக்கே வராமலும் சிலருக்கு மட்டும் சாதகமாக வருகை பதிவு உறுதி செய்யப்பட்டு அரசின் நிதி நூதன முறையில் திருடப்படுகிறது
இந்த மோசடியை களைய அரசு உடனடியாக பயோ மெட்ரிக் முறையில் பணித்தளத்தில் கைரேகை பதிவின் மூலம் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் நடைமுறையை கொண்டு வரவேண்டுமென கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்
இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டமானது தமிழ்நாட்டில் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு பணியாளர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் வகையில் பணித்தளத்தில் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்படுகிறது
இந் நடைமுறையை வரவேற்ப்பதோடு அரசுக்கு நன்றியையும் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா தெரிவித்திருக்கிறார்