வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 32வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது.

இந்தநிகழ்ச்சிக்கு தாசில்தார்
.பார்த்திபன் தலைமை தாங்கி முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தங்களும் 650 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் சீத்தாலட்சுமி, கூட்டுறவுதுணைப் பதிவாளர்(ஓய்வு) தியாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஓய்வு)
கருப்பையா, திருவள்ளுவர் இலக்கியமன்ற தலைவர் தனபாலன், வழக்கறிஞர் சாந்தி புலவர்குருசாமி முனியப்பன், கேசவன், முன்னாள் கவுன்சிலர் மகாசரவணன்,அய்யனார்,கார்த்திக்,
ராமலட்சுமி, செல்வம், நாகராஜ், யுவராஜ், விஜயராகவன், கோமதி,விஜயலெட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் டி.எம்.சரவணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஏ.வி.பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *