தாராபுரம் செய்தியாளர் பிரபு
உலக பட்டினி தினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத் தலைவர் நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி தாராபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் பெண்களுக்கும் சாலையோர ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக பட்டினி தினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைவர் நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டலின் படி தாராபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தாராபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் பல்லடம் யுவராஜ் தலைமையில் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கும், பெண்களுக்கும் முதியோர்களுக்கும் சாலை வர யாசகர்களுக்கும் மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகரம் ஒன்றிய கிளை நிர்வாகிகள் அப்பகுதியில் உணவு வழங்கப்பட்டு வருகின்றன..