செங்குன்றம் செய்தியாளர்
புழலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த ரவுடி பிடிபட்டார்.
புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்த பிரபல ரவுடியான சரவணன் என்ற வெள்ளை சரவணன் (வயது 33 ) மீது கவரப்பேட்டை ,எழும்பூர் ,புழல் ஆகிய பகுதிகளில் கொலை ,கொலை முயற்சி , வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் வெகு நாளாக தேடிவந்தனர் .
இந்நிலையில் தலைமறைவாக இருந்த வெள்ளை சரவணனை புழல் அடுத்த மாதனான்குப்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் மீது புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.