தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூரில் இயங்கி வரும் காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் புது முயற்சியில் இருக்கும் கருவிகளை வைத்து சிறப்பான கூட்டு முயற்சியால் பக்க விளைவு இல்லாமல் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த ஊசியை வெளியே எடுத்தனர். சிறுமியின் பெற்றோர்களும் மருத்துவ நிர்வாகத்திற்க்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி உடை அணியும்போது ஊசியை தவறுதலாக விழுங்கிய தால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அச்சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டருக்கு அழைத்து வந்தனர்.
சிறுமியை பரிசோதித்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அருண் சிறுமியின் நுரையீரலில் கம்பி போன்று பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று முறையில் அவருக்கு சிகிச்சை அளித்து சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.