திருவேடகம் ஷீரடி சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகம் விழா

சோழவந்தான் ஜுன் 5

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் ஷீரடி சாய்பாபா.கோவில் 15.வது வருடாபி ஷேகத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை கல்யாணசுந்தரம் சிவச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமத்துடன் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு முதல் கால யாக சாலை தொடங்கியது

தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை முடிந்து கடம்புறப்பாடாகி 11.30.மணியளவில் மூலவர் சாய்பாபாக்கு புனித நீர் மற்றும் பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட திரவ அபிஷேகங்கள் நடந்தது

பின் பகல் ஆரத்தி நிகழ்வு நடந்தேறியது.இதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை கோவிவ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *