காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் மற்றும் தத்தனூர் ஊராட்சிகளில்
குடியிருப்புகளுக்கான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
வீட்டுமனைகளை வாங்கிவிட்டு குடோன்கள் கட்டி உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் வீட்டுமனை பிரிவுகளை வாங்கியவர்கள் வீடுகளை கட்ட முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம், தத்தனூர் ஊராட்சிகளில் ஜெமிகார்டன், கைவல்யம் நகர் பகுதிகளில் புற்றீசல் போல தொழில் நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வந்ததால்,
இரவும் பகலும் இந்த தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் சத்தம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை கழிவுகளை தீயிட்டு எரிப்பது, தொழிற்சாலைகளின் கழிவு நீரை எடுத்து வந்து குடியிருப்பு பகுதிகளில் ஊற்றுவது, பொதுமக்கள் குடியிருக்க இயலாமல் கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவது, போன்ற பல்வேறு வகைகளில் குடியிருப்போர், பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பல ஆண்டுகளாக புகார் அளித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை அகற்ற சட்டப் போராட்டம் நடத்தி உயர் நீதிமன்றம் அனுமதி இன்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழில் நிறுவனங்களை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பூட்டி,சீல் வைத்து இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளது
இதனையடுத்து அனுமதியின்றி வீட்டுமனைகளில் இயங்கி வரும் தொழில்நிறுவனங்களுசீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அரசு சார்பிலும், ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்களை அகற்றுவதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவு மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் இயங்கு வரும் தொழிற்சாலைகளை தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளுக்கு மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியும் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால்
தற்போது முதற்கட்டமாக சட்ட விரோதமாக, நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் SARA EXPO என்ற தொழில் நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் இன்று துவக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைவல்யம் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் மற்ற தொழில் நிறுவனங்களையும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அகற்றப்படும் என அரசு தரப்பில் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி மற்றும் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தர்மா ஆகியோர் இரு நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளது குறிப்பிடதக்கது.