கரூர் செய்தியாளர் மரியன் பாபு
பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் சாமிநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.பாமக கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் இ.வை.பசுபதி,பாமக கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பு.ஆ குணசீலன்,மாவட்ட அமைப்பு தலைவர் கொங்கு குணா,மாநில செயற்குழு உறுப்பினர் செ.ஞானசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றியுரையாற்றினார்.
பாமக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜோதி, இளம்பெண்கள் தலைவர் கவிதா மாவட்ட துணை செயலாளர்கள் வாங்கல் சதீஷ், மார்க்கெட் வரதராஜன், சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கவின், மாவட்டத் துணைத் தலைவர்கள் கொங்கு செந்தில்,குமரேசன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர்அறிவழகன்,மாவட்ட தொழிற்சங்கம் செல்வராஜ், பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தலைவர் சுப்பிரமணி,உழவர் பேரியக்க தலைவர் நடராஜ், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் மெக்கானிக் சண்முகம், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் , ஒன்றிய தலைவர் சுரேந்தர், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், தலைவர் மு.மணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்னுசாமி,அன்புமணி தம்பிகள் படை செயலாளர் தனபால், தவிகை ஜீவா,பிரவின், கதிர்,கோபால், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எந்த கட்சியில் கூட்டணி அமைக்கிறாரோ அந்தக் கட்சி கூட்டணி வெற்றி பெறுவதற்கு கரூர் மாவட்டத்தில் தீவிரமாக பணியாற்றுவது எனவும் 2026 சட்டமன்ற பொது தேர்தலை மையமாக வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெரூர், மல்லம்பாளையம், புதுப்பாளையம்,அரங்கநாதன் பேட்டை, திருமுக்கூடலூர் ஆகிய பகுதிகளில் இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக,ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட புகார் கொடுத்தும்,இதுவரை நடவடிக்கை எடுக்காததை கரூர் மாவட்ட பாமக செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.