ராஜபாளையம் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் உயிர் உயிர்ப்பலி ஏற்பட்டால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு காவல் நிலையத்தில் புகார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டு தினங்கள் கதவடைப்பு போராட்டம் கடந்த மாதம் அறிவித்தனர்.ற அதற்கு முன்பு ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சிவகாசி கோட்டாட்சியர் விசுவநாதன் தலைமையில் ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன், மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையை நடத்தினார்கள். இதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கதவடைப்பு போராட்டத்தை விளக்கிக் கொள்வதாகவும், உடனடியாக புதிய சாலை அமைக்கும் பணிகளை துவக்குவதாகவும், 4 மாத காலத்திற்கு புதிய சாலை அமைத்து முடிக்கவும், இதற்கிடையே சாலை விபத்து ஏற்பட்டால் அதில் தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் மற்றும் பிரிவு அலுவலரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கும் படியும் ஒப்பந்தம் போடப்பட்டு கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 10 தினங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பணிகள் எதுவும் துவக்கப்படவில்லை. இதற்கிடையே ராஜபாளையம் மலையடிப்பட்டி தெருவை சேர்ந்த துப்புரவு தொழிலாளி முத்துக்காளை என்பவர் சாலை விபத்தில் பலியானார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த முதல் தகவல் அறிக்கையில் நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைமண்டல அதிகாரியையும், திருநெல்வேலியில் உள்ள நெடுஞ்சாலை துறை பிரிவு அதிகாரியையும் சேர்க்கும்படி ராஜபாளையம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாரியப்பன், என்.ஏ. ராமச்சந்திர ராஜா, வி. கே.பீம ராஜா, சரவணன் உள்பட பலர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.