கரூர் செய்தியாளர் மரியான் பாபு

வெ.மு.க வின் அரசியல் பொதுகூட்டம்

கரூர் மாநகரப் பகுதி உழவர் சந்தையில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுகூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட தலைவர் S.M.வினோத்குமார் பிள்ளை வரவேற்புரையாற்றினார்.
நிறுவனர், மாநிலத்தலைவர் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தனர்,மாநில அமைப்பு செயலாளர் பந்தல் S. ராஜா சிறப்பு அழைப்பாளர்களாக மணீஸ் மகேஸ்வரன்
கரூர் மாவட்டத் தலைவர் வ உ சி பேரவை,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கிழக்கு மாவட்டம் V.மூர்த்தி,தீரன் சின்னமலை பேரவை வழக்கறிஞர் ஆனந்த் கலந்து கொண்டனர் பின்னர் ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இதில் சோழிய வெள்ளாளர்,வெள்ளாளர் ,வேளாளர் என்று எல்லாமே ஒன்றுதான்.பல்வேறு மாவட்டங்களில் பல்வேறுபெயர்கள். அனைவருமே வெள்ளாளர்கள் தான் இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வெள்ளாளர் சமுதாயம் இல்லாமல் எந்த ஒரு அரசியல் அமைப்பும் அமைக்க முடியாது வரும் காலங்களில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெள்ளாளர் சமுதாயத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
எந்த அரசியல் கட்சிகள் வெள்ளாளர் சமுதாயத்தை முன்னுரிமைகள் வழங்குகிறார்களோ அந்த அரசியல் அமைப்பு ஆட்சி அமைக்க முடியும்.
கிருஷ்ணாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தனி தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும். வ உ சிதம்பரனார் பிள்ளை திருவுருவ சிலை வெண்கல சிலை வைக்க வேண்டும்.P.புபேஷ்குமார் பாண்டி வழக்கறிஞர் அணித்தலைவர் நன்றி யுரையாற்றினர்.பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *