எஸ் செல்வகுமார் சீர்காழி
சீர்காழி உட்கோட்ட காவல் நிலையங்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காண “பெட்டிஷன் மேளா”முகாம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உட்கோட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர், சிவசங்கரன் மேற்பார்வையில் சீர்காழி (பொறுப்பு) துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையிலும், காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, ஜெயலட்சுமி, முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அகோர மூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலையிலும் விசாரணை நடைபெற்றது.
இந்த முகாமில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள், மகளிர் வழக்குகள் என 50க்கும் மேற்பட்ட நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.