தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
குண்டடம்.(ஜனவரி-8)
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் குண்டடம் அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
குண்டடம் பகுதிகளில் இம்முகாமில் மொத்தம் 82 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அவர்களில் 07 புதிய நபர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதும், 08 நபர்களுக்கு அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டதும், மேலும் 07 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இம்மருத்துவ முகாம் குண்டடம் வட்டார வளமையம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாம் காலை 10 மணிக்கு ருத்திராவதி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. மோகன்ராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் அண்ணாதுரை அவர்கள் முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.