தஞ்சாவூர். ஜன- 9. தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி கல்லூரி தாளாளர் அருள் தந்தை அ. ஜான் சக்கரியாஸ் தலைமையில் நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர் கல்லூரி நிர்வாகி அருள்தந்தை எம்.ஆரோன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.
கண்காட்சியினை பார்வையிட தஞ்சாவூரில் செயல்படும் பள்ளிகள் மற்றும் வல்லம், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், வாண்டையார் இருப்பு பள்ளிகளின் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்காட்சியைக் கண்டு பயனடைந்தனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக அறிவியல் கண்காட்சியினை ஒருங்கிணைப்பாளர் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் கேசவ மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் பி. கரோலின் மேரி, கலைப்புலத் தலைவர் ராஜேஷ், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் உடன் இருந்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *