கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன் அந்த பகுதி பொதுமக்களுக்கு வழங்கினார் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ருபாய் 3000 ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்..

இந்நிலையில் இதற்கான டோக்கன் முன்னரே கொடுக்கப்பட்டு ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழகம் முழுவதும்,இன்று துவங்கியது..

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 91 வது வார்டு குளத்து பாளையம் பகுதியி ல் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகத்தை கோவை மாநகராட்சி 91 வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சி நியமன குழு தலைவர் இராஜேந்திரன் துவக்கி வைத்தார்…

இதில் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள பொதுமக்கள் , 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை மகிழ்ச்சியாக பெற்று சென்றனர் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டன..

இந்நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகி நாகராஜ் மற்றும் இளைஞரணி திருவரசன் உட்பட பலர் உடனிருந்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *