திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோசமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து துறையூர் மேற்கு ஒன்றிய (திமுக) செயலாளர் வீரபத்திரன் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் உள்ள முத்தியம்பாளையம், சிங்களாந்தபுரம், கண்ணனூர், பொன்னுசங்கம்பட்டி, கண்ணனூர் பாளையம், வீரமச்சான்பட்டி, கலிங்கமுடையான்பட்டி, வி.ஏ.சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் ரூ3000/-ரொக்கம், வேஷ்டி சேலை,பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டுடியோ சசிகுமார் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்