குறிஞ்சிப்பாடிவட்டம், வடலூர் மற்றும் சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மடிக்கணினி வழங்கும் விழாவில் 1,061 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,96,28,500 மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது, முதல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், குறிப்பாக அனைவரும் உயர்கல்வியினை அடையும் நோக்கிலும் பல்வேறு வகையான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நான் இந்ததொகுதியில்
சட்டமன்ற தேர்தலில் நின்று வென்ற போதுகிராமங்களில் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளி இல்லை, அவர்கள் வடலூரில் தனியார் பள்ளியில் தான் படித்தார்கள்,
பணம் கட்டிதான் படிக்கவேண்டும்,இவர்கள் படிப்பதற்கு நகரத்திற்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது கலைஞர் ஆட்சியில் இவர்கள் பேருந்துக்கள் மூலம் நகரத்துக்கு சென்று படித்தார்கள்,

மேலும் பெண்கள் நகரத்துக்கு
செல்வது தயக்கம் ஏற்பட்டதால்,வடலூரை சுற்றியுள்ளகிராமங்களில் கருங்குழி, மருவாய், போன்ற கிராமங்களில் உயர்நிலையும் மேல்நிலைப் பள்ளிகளும் துவக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்,இப்பகுதியில் உள்ள மாணவர்கள் உயர்கல்விக்காக,தனியார் கல்லூரியில் பணம் கட்டி தான் படிக்கும் நிலை இருந்தது,அரசு கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் கடலூர் மற்றும் விருத்தாச்சலம் சென்று தான் கல்லூரி கல்வியை தொடர முடியும், இந்த நிலையை மாற்றி வடலூர் அரசு கல்லூரி கல்லூரி துவக்கப்பட்டது,


பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களை போக்குவதற்காகவும், ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு உயர்கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் வழங்கிடும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றலின்றி உயர்கல்வி பயிலும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை கடலூர் மாவட்டத்தில் 1,01,108 நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டதன் மூலம் 5,043 நபர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது சி.முட்லூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மணிவண்ணன், கிருத்திகா ஆகிய மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிபெற்று வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களின் உலகளாவிய அறிவினை வளர்த்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக “உலகம் உங்கள் கையில்“ என்ற திட்டத்தின்கீழ் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகளவில் தரச்சான்று பெற்ற நிறுவனங்களின் மூலம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை சென்னையில் மாநில அளவில் ஜனவரி5ந் தேதி முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக
கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.18,500 மதிப்புள்ள மடிக்கணினி 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8,228 மாணவர்களுக்கு ரூ.15.22 கோடி மதிப்பீட்டிலும், 3 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவர்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 கல்லூரிகளில் பயிலும் 9,051 மாணவர்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இதே போன்று வடலூர், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 238 மாணக்கர்களுக்கும், சி.முட்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 823 மாணக்கர்களுக்கும் என மொத்தம் 1,061 மாணவர்களுக்கு ரூ.1,96,28,500 மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 136 தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசினால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளை வேலை, கல்வி, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கிராபிக்ஸ் வடிவமைப்பு, கேமிங் போன்ற பல பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மடிக்கணினி சிறியதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், மாணவர்கள் பயணத்தின்போதும், வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கும்.மாணவர்கள் உங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், ஆராய்ச்சி, ப்ராஜெக்ட் வேலைகள், குறிப்புகள் எடுப்பதற்கும், எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் போது அலுவலகப் பணிகளுக்காகவும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே, இம்மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வளர்த்து உலகளாவிலான வேலைவாய்ப்பினை பெற்று உங்களது வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், வடலூர் கலைக்கல்லூரி முதல்வர் வண்ணமுத்து, சி.முட்லூர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் அர்ஜீனன் மாவட்ட கல்விக்குழுதலைவர் சிவக்குமார்,நகர மன்ற தலைவர் சிவக்குமார்,நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயலு,மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“செய்தி ஜீவா செந்தில்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *