திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்.

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ 3000 மற்றும் கரும்பு அரிசி சர்க்கரை புடவை வேஷ்டி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை தமிழக முதல்வர் இன்று காலை துவக்கி வைத்த நிலையில் திருவொற்றியூரில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் எம். எல். ஏ திருவொற்றியூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட திருநகர் மாணிக்கம் நகர் சத்திய புரம் சின்ன எர்ணாவூர் விம்கோ நகர் உள்ளிட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஏற்கனவே நியாய விலை கடைகளில் டோக்கனை வீடு வீடாக சென்று கொடுத்த நிலையில் டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் இன்று நியாய விலை கடைக்கு வந்து கரும்புடன் 3000 ரூபாய் பொங்கல் தொகுப்புகளுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர் இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், அயலஅணி மாவட்ட தலைவர் எஸ்.டி.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 10 பாட்டுக்கு உட்பட்ட சன்னதி தெரு மற்றும் மாட்டு மந்தை சடையன் குப்பம் பாட்டை ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மண்டல குழு தலைவர் தி மு க தனியரசு. மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன்  வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன்  தொகுப்பு 3000 ரூபாய் ரொக்க பணம் சர்க்கரை அரிசி கரும்பு புடவை வேட்டி உள்ளிட்டவைகளை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *