கம்பம் அருகே சுருளி அருவியில் கூட்டுறவுத்துறை செயற்குழு கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தனியார் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார் மாநிலச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு கூட்டுறவு துறை தேர்தல் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் தான் நடைபெற வேண்டும் வருவாய்த்துறை உள்ளது
போல் தனிப்பிரிவு உருவாக்கி நிரந்தரமாக செயல்பட வேண்டும் துறை அலுவலர்களுக்கு வாகன வசதி இல்லாததால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது
துணைப் பதிவாளர் இணைப்பதிவாளர் உள்பட அனைத்து அலுவலர்களுக்கும் அரசு விரைந்து வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் பால் கூட்டுறவு தணிக்கை துறையில் பணிபுரியும் பணியாளர்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணி புரிவதால் அந்தத் துறையில் பணிபுரியும் பணியாளருக்கு பதவி உயர்வு என்பது கேள்வி குறியாக உள்ளது
எனவே பால்வளத்துறை தணிக்கை பிரிவில் உள்ள பணியாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் கூட்டுறவு துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற பதிவாளர் சுற்றறிக்கையை உடனே அமல்படுத்த வேண்டும் என 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்