கோவை மாநகர மாவட்ட ஹிந்து முன்னணி பேரியக்கத்தினுடைய
இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம் மற்றும் இணைப்பு விழா மற்றும் கணபதி நகரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்து முன்னணியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்கத்தில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா c. சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் அவர்கள் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்து வியாபாரிகள் சங்கம் மாநிலச் செயலாளர் பழனி ஜெகன் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் பரமசிவம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்டச் செயலாளர் பாபா. ஆ.கிருஷ்ணன் மாவட்டத் தலைவர் K. தசரதன் .மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C. தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்து வியாபாரிகள் நலச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சுதேசி பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டி இந்த கூட்டம் நடைபெறுவதாகவும்
இந்து வியாபாரிகள் உடைய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும் இந்த சங்கம் செயல்படுவதாக மாநில பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் அவர்கள் தெரிவித்தார் .
மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்கள் பேசும்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாக அலட்சியமே காரணம் எனக் கூறினார்.
இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதை விட அவர்களது குடும்பத்திற்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கை இந்து மதத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளதாகவும்
பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவிகள் சந்தனம் குங்குமம் திருநீறு வைக்க கூடாது என கூறுவது
சந்துரு அவர்களுடைய நாத்திக மனப்பான்மையை காட்டுவதாகவும் இதை இந்து முன்னணி பேரியக்கம் கடுமையாக எதிர்த்து போராடும் எனவும் பேசினார்.
இதைத்தொடர்ந்து கணபதி நகரில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாட்டை மாவட்டத் துணைத் தலைவர் K. கிருஷ்ணகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் K. கதிர்வேல். நகர பொதுச்சாளர் நந்து
ஆகியோர் கவனித்தனர்.