விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், மம்சாபுரம், கான்சாபுரம், வத்திராயிருப்பு போன்ற மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.

ராஜபாளையம் தேங்காய் பேட்டையில் இருந்து காய்கள் உரிக்கப்பட்டு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் இருந்து இந்தியா முழுவதும் தேங்காய் அனுப்பப்பட்டு வந்த நிலை, தற்போது ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாவட்ட போன்ற மாநிலங்களில் அதிகமான தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் அங்கிருந்து தேங்காய்கள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ராஜபாளையம் மம்சாபுரம், சேத்தூர், தேவதானம், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான தேங்காய் பேட்டைகள் அதிகரித்து விட்டதன் காரணமாகவும், தொழிலில் போட்டிகள் ஏற்பட்டுள்ளதால் தொழில் தற்போது மந்த நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் ராஜபாளையம் சந்தை மார்க்கெட் பின்புறம் உள்ள தேங்காய் பேட்டையில் 45 முதல் 50 தேங்காய் பேட்டை கள் இருந்து செயல்பட்டு வந்தன. தற்போது ஐந்து பேட்டைகள் மட்டுமே தேங்காய் உரித்து வியாபாரம் நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக தேங்காய் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படுவதால் தென்னை விவசாயிகளிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளை ஈ நோய் தாக்குதல் காரணமாக தென்னை மரங்கள் மற்றும் பாளைகள் கருகி வரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. தென்னையில் ஏற்படக்கூடிய இந்த வெள்ளை ஈ தாக்குதலை வேளாண்மை துறையினர் கட்டுப்படுத்தினால் தேங்காய் உற்பத்தி இன்னும் அதிகமாக இருக்கும் என்பது விவசாயிகளின் கருத்து.

மேலும் ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் செய்வதற்கு பதிலாக, நமது நாட்டிலேயே விளையும் தேங்காய்கள் அதிகமாக தேங்கி கிடக்கும் நிலை உள்ளது. இந்த தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் நிலை ஏற்படும். தேங்காய்க்கும் அதிக விலை கிடைக்கும் என்பது விவசாயிகள் அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து தேங்காய் பேட்டையில் காய் ஒன்றுக்கு ரூ.8-50 பைசா கொள்முதல் ஒரு ரூபாய் கூலியாக சேர்த்து ரூ.9-50 பைசாவிற்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதை உரிப்பு கூலியாக கொடுத்து, லாரி வாடகை கொடுத்து அனுப்பி வைக்கும் போது தொழில் போட்டி காரணமாக அதிகமான லாபம் இல்லாத நிலையிலும், குறிப்பாக நஷ்டம் உள்ள நிலையிலும் வியாபாரம் செய்து வருவது பல வியாபாரிகள் இந்த வியாபாரத்தை விட்டு விலகி விட்டது வருத்தத்தை அளிக்கிறது.

எனவே தமிழக அரசு பாமாயில் அதிக விலைக்கு கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை விடுத்து தேங்காய் மூலம் தேங்காய் எண்ணெய் தயாரித்து விட்டால் அரசுக்கும் லாபம் கிடைக்கும் விவசாயிகளுக்கும் நல்ல லாபத்தை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *