திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மதுரை வீரன், பட்டாளம்மன் திருக்கோயில் இந்த திருக்கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆயக்குடி 18 வது வார்டு கவுன்சிலரும் ஆயை காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவரும் ஆகிய டாக்டர்.அஜ்மத் அலி வருகை தந்து சிறப்பு செய்தார்.
தொடர்ந்து இவ்விழாவின் தலைமையாக திமுக அவைத் தலைவர் சையது அபுதாஹிர், முன்னிலையாக மன்சூர் உசேன், சபீக் அகமது,
பொன்.முருகானந்தம், சின்னவர் (எ) அஜ்மத் அலி மற்றும் விழாவின் பங்கேற்பாளராக அப்துல் ஜாபர், அக்பர்அலி, அபுல் கலாம் சர்தார், தாஜுதீன், சதாம் உசேன்,ஹக்கீம், பாரிஸ்அகமது, திமுக பேரூர் செயலாளர் சின்னத்துரை பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன் துணைத் தலைவர் சுதாமணி கார்த்திகேயன் கோயில் நிர்வாகிகளான தலைவர் கனகராஜ், கிட்டான், மற்றும் மகுடீஸ்வரன்,குமார், சக்திவேல், கன்னியப்பன், கிருஷ்ணசாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆயக்குடி பகுதியில் ஜாதி மத பேதமற்ற சிந்தனையுடன் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வரும் டாக்டர். அஜ்மத் அலி மத நல்லிணக்க அடிப்படையில் மதுரவீரன், பட்டாளம்மன் கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மதிப்பு செய்யப்பட்டன தொடர்ந்து காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 500 நபர்களுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஆயக்குடி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக திருக்கோயில் விழாவில் அன்னதானம் வழங்கிய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தனர்.