எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரணம் குணமடைய வேண்டி சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் 108 சித்தர் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் ஆட்சியர் மகாபாரதி பெயர் நட்சத்திரத்திற்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தனர்.
தொடர்ந்து 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டனர். இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிராத்தனை செய்து வழிப்பட்டனர்.