புவனகிரி ஜூன் 28
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக அரசு அறிவகத்துள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டம் சம்பந்தமாக ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவீடில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர் மேலும் இந்த கூட்டத்தில் அடிப்படை தேவைகளான சுகாதாரம் குடிநீர் சாலை வசதி குறித்து விவாதிக்கப்பட்டது
இதில் பற்றாளர் இளவேனி துணைத் தலைவர் தையல்நாயகி ஊராட்சி செயலர் ரமேஷ் குமார் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்