வேலா. செந்தில் குமார் செய்தியாளர் திருவாரூர்
திருவாரூர் மாவட்ட திமுக இளைஞர் அணியின் சார்பில், மாவட்ட திமுக துணை அமைப்பாளர் வி.வினோத்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணை செயலாளர் நா. இளையராஜா அவர்களின் தலைமையில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தானந்தாங்கி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை மாநில இளைஞரணி துணை செயலாளர் நா. இளையராஜா அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் ஒன்றிய கழக பொருளாளர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், இளைஞரணி நிர்வாகிகள் பரமேஸ்வரா,ஸ்ரீதர்,முருகானந்தம், ஒன்றிய மாணவரணி நிர்வாகி புஷ்பராஜ், முன்னாள் தகவல் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் சி.எஸ்.சிவகுமார், பொன் மாணிக்கம், சேகல் இளையராஜா, உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
முன்னதாக கீழச்சேரி கிளைச் செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் ஆர் கோமதி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.