ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை மது பாட்டில்கள் பறிமுதல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிபட்டி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது
இந்த தகவலின் பெயரில் வருவாய் துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆனதால் ராஜதானி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்
இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல்
செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்