வானமாதேவி சமுதாய நலக்கூடத்தில் உணவு பரிமாறும் கூடம் அமைத்துக் கொடுக்க மாவட்ட கவுன்சிலருக்கு மனு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் வானமாதேவி கிராமத்தில்
சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்
தொல் திருமாவளவன் நிதியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கும் நிலையில் உள்ள சமுதாய நல கூடம் கட்டிடத்தில் உணவு பரிமாறும் கூடம் இருக்கையோடு மேற்கூறை அரை மாவட்ட கவுன்சிலர் எம் எஸ் கந்தசாமி நிதியில் கட்டி கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வானமாதேவி ராஜா தலைமையில் கிராமத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
வேலு, கொளஞ்சி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பரமசிவம்,சேனாதி மணிகண்டன் சச்சிதானந்தம் மணிகண்டன் குடிகாடு கார்த்திக் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கவுன்சிலர் செய்து தருவதாக உறுதி அளித்தார்