தேனி அருகே பூதிப் புரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ளது பூதிப் புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் 86 12 என்ற எண்ணில் டாஸ்மாக் கடை உள்ளது
இதன் அருகே பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிராம மக்கள் அதிகம் வழிபாடும் ஒரு கோவில் உள்ளது. மேற்படி சுகாதார நிலையம் மற்றும் கோவில் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதேபோல் கோவிலுக்கு வரும் ஆன்மீக பக்தர்கள் பெண்கள் ஆகியோருக்கு கடும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராமப் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது