தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டக் கிளைகளிலும் தேர்தல் நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஒன்றிய அலுவலக சிவஇளங்கோ அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சதீஷ்பாபு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்
கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டக் கிளைகளிலும் தேர்தல் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டக் கிளை நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.