வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் பாதிரியபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சி, பாதிரியபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க விழா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆர். ரத்தினம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய பொறுப்பாளரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் கு. ராஜா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ். உதயகுமார் கட்சியின் நோக்கங்களையும், செயல்படுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ் எம் செந்தில் குமார் பாதிரிய புரத்தில் 16 கட்சி உறுப்பினர்களை கொண்ட புதிய கிளையை அறிவித்து, செயலாளராக சரவணன், துணைச் செயலாளராக கார்த்திகேயன், பொருளாளராக கலியமூர்த்தி ஆகிய பொறுப்பாளர்களை அறிவித்து, ஸ்தாபன கருத்துக்களை எடுத்துக் கூறினார்,
கூட்டத்தில் வேதாம்பறை கிளைச் செயலாளர் மதியழகன், பாதிரியபுரம் கிளை கட்சி உறுப்பினர்கள் மாரிமுத்து, ரத்தினம், அன்பழகன், பிரதீப், முருகேசன், சரவணன், ராஜ்குமார், பிரதீஸ், மாரியம்மாள், ரூபி, தனலட்சுமி, ராஜ்குமார், நாகவல்லி, கீதா, பார்வதி, கல்யாணி, சரண்யா, மூக்காயி, ரம்யா உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தீர்மமானங்களாக:- விவசாயிகளை பழிவாங்கும் நோக்கோடு ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெற்களஞ்சிய திடலை வீட்டுமனை பட்டா போட்டு கொடுத்திருப்பதை வன்மையாக கிளைக் கூட்டம் கண்டிக்கிறது.
விருப்பாச்சிபுரம் ஊராட்சி பாதிரியபுரத்தில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசு புறம்போக்கில் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க கிளைக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
விருப்பாச்சிபுரம் ஊராட்சி நாலாவது வார்டுக்குட்பட்ட பாதிரியபுரம் தெருவில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது, இதனால் கொசு உற்பத்தி ஆகி தொற்று நோய் (டெங்கு காய்ச்சல்) ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே உடனடியாக வடிகால் வசதி அமைத்து தர கிளைக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. வீட்டுமனை பட்டா வழங்குவதோடு அரசு வழங்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர கிளைக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
விருப்பாச்சிபுரம் ஊராட்சிக்கு உடனடியாக 100 நாள் வேலை அரசு வழங்க வேண்டும் என கிளைக் கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.