செங்குன்றம் செய்தியாளர்
சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகரில் உள்ள தனியார் திருமண மகாலில் சிறகுகள் மகளிர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி கலைஞரின் கைவண்ணத்தில் அமைந்த திரைப்பட பாடல்கள் மற்றும் புகழ் பரப்பும் 101 பாடல்களை 25 பாடகர்கள் குழுவாக இணைந்து தொடர்ந்து 12 மணி நேரம் உலக சாதனை படைத்துள்ளனர் .
நிகழ்ச்சியின் முதலாவதாக செம்மொழியாம் தமிழ் மொழியாம் என்ற பாடலுக்கு சாரா ரிதம் குழுவினரின் நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் தொடங்கியது.
இறுதியில் சிறகுகள் மகளிர் சங்க இயக்குனர் சாரதாவிற்கு யூனிவர்சல் அச்சுவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் மற்றும் பியூசர்ஸ் கலாம் புக் ஆப் ரெகார்ட் நிறுவனத்தினர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். இதில் சின்னத்திரை நடிகர் அசோக் உட்பட பலர்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.