கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை தொடர் நடவடிக்கை இணைந்தும், தனித்தனியாகவும் ஆய்வுகள் செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து, மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்படும் நபர்கள் மீது அபராதம் ,கடை இயங்க தடை மற்றும் ரிமாண்ட்(சிறை தண்டனை ) உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.காளியப்பன் மற்றும் கடத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சுகுமார் அவர்கள் மூலம் பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காவல் உதவி ஆய்வாளர் முருகன் , கிரேடு 1 காவலர்கள் சத்யா மற்றும் அருண் உள்ளிட்ட குழுவினர் குழுவினர் ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கம்பைநல்லூரில், இருமத்தூர் ஜங்ஷன் பகுதியில் ஒரு மளிகை கடைக்கும் கடத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட லிங்கநாயக்கனள்ளி அஞ்சல் அஸ்தகீரியூரில் ஒரு பெட்டி கடைக்கும் கடை இயங்க தடை விதித்து கடையை மூடியும் உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்தும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து சென்றனர்.