விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் துணைத்தலைவர் பத்மநாபன் தலைமையில் நடந்தது
செயலாளர் வெங்கடேஸ்வரராஜா வரவேற்றார் கூட்டத்தில் சமீப காலமாக ராஜபாளையம் தென்காசி மதுரை சாலைகள் குன்டும் குழியுமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிறமத்துக்கு ஆளாகி இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து சங்கத்தினர் ஆலோசித்து இரண்டு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்து அதற்கான அறிவிப்பு வெளியிட்ட நிலையில் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சங்கத்தினரை அழைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்பந்த வரைவு செய்யப்பட்டு விரைந்து சாலை பணிகள் தொடங்கப்படும் என்ற உறுதிமொழி எழுத்து மூலமாக கொடுத்ததின் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது
தற்போது அதற்கான டென்டர் விடப்பட்டு பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது இது நமது சங்கத்திற்கு கிடைத்த வெற்றி அதேபோல நகராட்சி சாலை பகுதிகளில் இதேபோன்ற பிரச்சனைகள் உள்ளது
அதையும் சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்று நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு நேரில் சென்று எழுத்து பூர்வமாக நமது கோரிக்கைகளை எடுத்துரைப்போம் அதேபோல் பல்வேறு கிளைச்சங்கத்தினரையும் ஒன்றினைத்து சமூக நலப்பணிகளில் ஈடுபடுவோம் என்று கலந்துகொண்ட அனைவரும் ஆலோசனைகள் கூறினர்
கூட்டத்தில் இனைச்செயலாளர் மணிவண்ணன் பொருளாளர் ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்