மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு அருகே இயங்கி வரும் ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுல தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உள்ள 40 மாணவர்களுக்கு உணவு தட்டுகள், டம்ளர்கள் வழங்கும் விழா
நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் மேரி பாக்கியம் வளர்மதி அவர்களிடம் அரிமா.ஜெயராமன் தட்டுகளையும் டம்ளர்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர்கள் திரு.காஜா மைதீன் மற்றும் நண்பர்கள் குழுவினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.
. பள்ளி ஆசிரியர் தாரணி மாலா நன்றி கூறினார்.