காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் நத்தாடையூரில் மருந்தீயல் ஆராய்ச்சி கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழா.
திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழாவின் தொடர்ச்சியாக ஜனவரி 9-ம் தேதி அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் காங்கேயம் கல்லூரிகளின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அதிகாரி எம்.இளங்கோவன் M.D அவர்கள் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்ப்படுத்தி, கல்லூரியின் முதல்வர்.S.ஜெயராமன் அவர்களுடன் இணைந்து தொடங்கிவைத்தார்.
இம்முகாமில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்தி பயன்பெற்றனர்.