பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் மறைந்தார் GD கோபாலகிருஷ்ணன் படத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவரும்,தமிழிசை சங்க செயலாளர் பதவி வகித்து வந்த கோபாலகிருஷ்ணன் வயது (79). இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் சம்மந்தி ஆவார் இவருக்கு கடந்த 28ஆம் தேதி அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவருக்கு லலிதா என்ற மனைவியும் மேனகா, லாவண்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர் . இந்நிலையில் மறைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து.
அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செ,தாமோதரன் , உடுமலை ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் , வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பொள்ளாச்சி பாஜக நகர செயலாளர் பரமகுரு
உள்ளிட்ட பலர் கோபாலகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.