சங்கர் ஐஏஎஸ் அகாடமி யில் பயின்று அரசு துரை சார்ந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சாதனையாளர் விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் குரூப் 1 தேர்வில் செல்வி. மது அபிநயா, அவர்கள் துணை ஆட்சியராகவும், திரு .விஜய் மற்றும் செல்வி. சுபாஷினி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் குரூப் 2வில் திருமதி. பிரியா மற்றும் செல்வி.சுபத்ரா அவர்கள் துணைப்பதிவாளர்களாகவும் மற்றும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளராகவும், இதர மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த அரசு பணிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 5500-க்கும் மேற்பட்ட பணியிடங்களில்( டிஎன்பிசி குரூப் 2/2A, இந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலை அதிகாரி, கால்நடை உதவி மருத்துவர்)
சங்கர் அகாடமியைச் சார்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று தமிழக அரசின் பல்வேறு பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் மிக மிகவும் குறிப்பிடத்தக்கது.