திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூரில் ராஜ குலத்தோர் மகா சங்கத்தில். அரசு பொதுத்தேர்வில் 10th 12th மற்றும் பட்டப் படிப்பு இந்த ஆண்டு முடித்த உறுப்பினர்களுடைய குழந்தைகளுக்கு பரிசுகளும் கேடயங்கள்
பாராட்டுச் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சங்க துணை தலைவர் M. ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

சங்க செயல் தலைவர் S. முத்தையன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் னுடைய பொதுச் செயலாளர் R. குழந்தை வேலு அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் 10 th 12 th டிகிரி முடித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தும் விதமாகவும் வாழ்வில் சிறப்பாக செயல்படவும் எதிர்காலம் லட்சியம் கனவு அதற்கு மேலும் கடின உழைப்பை செலுத்த நமது சங்க கூட்டத்திற்கு அழைத்து நற்சான்றிதழ் அன்பளிப்பு நினைவு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரவேற்று மனதார வாழ்த்தி. வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகாசங்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள்.
அதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அவர்களுக்கும் சங்கத்தால் பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது. ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டது
சங்க ஒற்றுமை வளர்ச்சி தொடர்பான பெரும் மதிப்புமிக்க கருத்துக்களை ஆலோசனைகளை உறுப்பினர்கள் வழங்கினார்கள். ஆண்டுதோறும் செல்லும் இன்ப சுற்றுலா இந்த ஆண்டும் செல்வதாக முடிவு செய்யப்பட்டது சங்கத்தில் கல்யாணம் மாலை சுயவரம் நிகழ்ச்சி விரைவில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்கத்தின் பொறுப்பாளர்கள்
P . செல்வராஜ் V. சுப்பிரமணியன் V. செந்தில் குமார்
P . முத்துகிருஷ்ணன் M. கண்ணன் மற்றும் உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்கள் செயற்குழு.. பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கு பெற்று சிறப்பித்தார்கள் நிறைவாக சங்கத்தின் னுடைய பொருளாளர் J. நடராஜன் கணக்கு வரவு செலவுகளை தாக்கல் செய்து அவரே நன்றியுறையும் ஆற்றினார்கள்..