மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆலய வளாகத்தில் இருந்துகொடி பவனியாக எடுத்துவரப்பட்டு ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் இரட்சகர் சபையினுடைய பெங்களூர் மறை மாநில தலைவர் அருட்தந்தை ஜான் மேத்யூ கொடியேற்றி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி விழாவை துவங்கி வைத்தார்

இதனைத் தொடர்ந்து இன்று வரை தினமும் மாலை 5:45 மணிக்கு ஜெபமாலை வழிபாடும் தொடர்ந்து திருவிழா திருப்பலியும் பல்வேறு அருட்தந்தையர்களால் நடை பெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வுகளாக குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு சதங்கை கலைத்தொடர்பு மைய இயக்குனர் அருட்தந்தை அலெக்ஸ் ஞானராஜ் திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கினார்,

மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு உறுதி பூசுதல் வழங்கும் நிகழ்வை நடத்தி வைத்தார். தொடர்ந்து திருவிழா திருப்பலியை சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு சூசைமாணிக்கம் அவர்கள் தேர் பவனியை துவங்கி வைத்து திருவிழா சிறப்புத்திருப்பலி நிறைவேற்றினார்.

சிவகங்கை மறைமாவட்ட மேதகுஆயர் லூர்து ஆனந்தம் திருப்பலி நிறைவேற்றி தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு இறை மக்கள் அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *