தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாள் ஊட்டச்சத்து–கல்வி பயிற்சி
குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி பயிற்சி கடந்த மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சியில் அங்கன்வாடி மையங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி மழலையர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்குவதின் முக்கியத்துவம், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான அணுகுமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அந்தந்த மையத்திற்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒருவரும் விடுபடாமல் அரசின் திட்டங்களால் முழுமையாக பயனடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் எவ்வாறு சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி புவனேஸ்வரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி தீபா, மேற்பார்வையாளர் ஒன்றாம் நிலை திருமதி வளர்மதி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர்.
இந்த பயிற்சியில் குண்டடம், மடத்துக்குளம் மற்றும் மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.