-தாராபுரம் உட்பட்ட அமராவதி பாசன பகுதியான கொழிஞ்சி வாடி காமராஜபுரம் மீனாட்சி வீராச்சிமங்கலம் மீனாட்சிபுரம் அலங்கியம். உள்ளிட்ட பகுதிகளில் சுமார்50-க்கும் ஏக்கர்களில் கரும்பு சாகுபடி பொங்கல் பண்டிகைக்கு தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வதற்காக சிறு குறு விவசாயிகள் பயிரிட்டு இருக்கிறார்கள்
.இப்பகுதியில் விளைவிக்கப்படும் கரும்பு இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிட்டதால் தரமானதாகவும், இனிப்பு அதிகமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொளிஞ்சிவாடி சேர்ந்த விவசாயி சின்னவன் கூறுகையில் தாங்கள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரா என்று சிறு நிலங்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வருகிறோம் குறிப்பாக பொங்கல் வரும் போதெல்லாம் கரும்பு பயிரிடுகிறோம் தமிழக அரசு நேரடியாக மக்களுக்கு நியாய விலை கடையில் கரும்பு வழங்குகிறார்கள் அந்தக் கரும்பு கொள்முதல் மதுரை கோயம்புத்தூர் சேலம் என்று வெளியூர்களில் வாங்கி வந்து பொதுமக்களுக்கு கொடுப்பதால் கரும்பு வாடி விடுகிறது அனைவரும் வீட்டில் கரும்பு இருப்பதால் தெருவில் போட்டு விற்கும் பொழுது எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கிறது ஆகையால் அந்தந்த மாவட்டத்தில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களிடம் நேரடியாக கரும்பை வாங்கி தினமும் ரேஷன் கடைகளுக்கு கொடுக்கப்பட்டால் எங்களைப் போல் விவசாயிகளும் பொருளாதார ரீதியாக பயனடைவோம் விளைவிப்பதற்கு கொள்முதல்ச் செலவும் அதிகமாக இருக்கிறது தமிழக அரசு இதை எங்களின் கோரிக்கையாக எடுத்து அடுத்த ஆண்டு முதல் எங்களிடம் கரும்பு கொள்முதல் செய்தால் உங்கள் வாழ்வாதாரம் செழிக்கும் என்று கூறினார்
கரும்பு மக்கள் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை, கல்லீரல் – பிரச்சனை. ஜீரண கோளாறு போன்ற நோய்களுக்கு நன்மை தரும் கரும்பை சாப்பிட்டால் வயிற்று மண்டல பகுதி சுத்தமாகும் என்றும், உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை – கொண்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கி ன்றனர். மேலும் இந்த கரும்பு கடித்து சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும் சிறுவர் முதல் பெரியவர் வரை இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்
ஒரு ஜோடிகரும்பு 100 ரூபாய்க்கு விற்பனையானால்
தான்,போக்குவரத்து கூலி, சாகுபடி செலவு கட்டுபடியாகும்
இதற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகமும். வேளாண் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, உள்ளூர் கரும்புகளை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் பகுதியில் மட்டும் சுமார் 150 ஏக்கருக்கு மேல் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கரும்புகளை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு லாபமும், பொதுமக்களுக்கு தரமான கரும்பும் கிடைக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை தொடங்க உள்ள நிலையில், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், இடைத்தரகர்கள் இன்றி நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ1 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகளும் சார்பாக கேட்டுக் கொண்டார் விவசாயி ஆல்பர்ட் சண்முகம் சின்னவன்