புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்க Confederation of Renewable Power & Energy Solutions (CORES) ‘கோர்ஸ்’ எனும் புதிய அமைப்பு கோவையில் துவக்கம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர் மற்றும் மின் தீர்வு துறைகளில் செயல்படும் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் இணைக்கும் வகையில் கோர்ஸ் எனும் அமைப்பு கோவையில் துவங்கப்பட்டது…

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கோர்ஸ் அமைப்பின் துவக்க விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…

விழாவில், முதன்மை விருந்தினராக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கோர்ஸ் அமைப்பின் லோகோ மற்றும் இணையதளத்தை வெளியிட்டனர்..

கோர்ஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்..

இதில் புதிய தலைவராக சஞ்சய், துணைத் தலைவர்களாக அண்ணல் மற்றும் சிவகுமார், பொதுச் செயலாளராக லெனின் சுந்தரம், பொருளாளராக செந்தில் குமார், இணைச் செயலாளராக அல்தாப் ஷெரிப் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்…

இதனைத் தொடர்ந்து, கோர்ஸ் அமைப்பின் தொலைநோக்கு, இலக்கு மற்றும் செயல் திட்டங்கள் தமிழ்நாட்டின் மாறிவரும் மின்சார சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின் தீர்வு துறைகளில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன..

கோர்ஸ் அமைப்பின் நோக்கம் குறித்து நிர்வாகிகள் பேசுகையில்,மின் துறை தொடர்பாக தொழில் துறையில்,சுத்தமான, நிலையான மற்றும் மலிவான ஆற்றல் தீர்வுகள் நோக்கி அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்குவதே அமைப்பின் நோக்கம் என தெரிவித்தனர்..

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் துறையினர், சங்க உறுப்பினர்கள், தொழில்முனைவோர், சிஸ்டம் இன்டக்ரேட்டர்கள், உற்பத்தியாளர்கள்,என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *