சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா : குண்டடம் ஒன்றியத்தில் உற்சாகம்.

மாவட்ட கபடி போட்டியில் சூரியநல்லூர் அணி முதல் பரிசு.

திருப்பூர் கிழக்கு மாவட்டம் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி,
குண்டடம் ஒன்றியம் சார்பில்,சூரியநல்லூர், மற்றும் சடையபாளையம் ஊராட்சி எரகாம்பட்டி மாரியம்மன் கோவில் திடல் பகுதிகளில்,சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். சந்திரசேகரன் தலைமையில்,மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் முன்னிலையில்,இந்த விழா நடைபெற்றது.

இதில்,மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டிகளில்,சூரியநல்லூர் அணி முதல் பரிசை வென்றது வெற்றி பெற்ற அணிக்கு,ரொக்கப் பரிசு,கோப்பை ஆகியவற்றை,அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து,பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது.
முதியவர்கள் முதல் இளம் பெண்கள் வரை,உற்சாகமாக கயிறு இழுத்து விளையாடினர்.
பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு,விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவித்தனர்.

இதேபோல்,எரகாம்பட்டி பகுதியில்,வாலிபால்,கிரிக்கெட்,கபடி,கோ-கோ,மியூசிக் சேர் கோலப்போட்டி. உள்ளிட்ட,பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் என,அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,“திமுக அரசு,சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு,மக்கள் ஒன்றிணையும் விழாக்களை நடத்தி வருகிறது.
சமத்துவ பொங்கல் விழா என்பது,சாதி,மத,வேற்றுமைகளைத் தாண்டி,ஒற்றுமையை வளர்க்கும் விழா விளையாட்டு என்பது,உடல் நலத்தையும்,ஒழுக்கத்தையும்,
ஒற்றுமையையும் வளர்க்கும் முக்கியமான கருவி கிராமப்புற இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர,திமுக அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வருங்காலத்தில்,மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க,அரசு முழு ஆதரவு வழங்கும்,” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.ஜி.முத்துக்குமார்,
பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.கருணாகரன்,மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் மயில்சாமி,சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்,ஒன்றிய துணைச் செயலாளர் குமரவேல்,குண்டடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவ.பிரகாஷ்,ஒன்றிய விவசாய அணி மணிவேல், குணசேகரன்,
ஒன்றிய மாணவர் அணி சின்னத்துரை,இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்,ஒன்றிய விளையாட்டு அணி அமைப்பாளர் சசிகுமார் (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்),மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அருகானி,
தொண்டரணி மகளிர் அமைப்பாளர் டாக்டர் இந்திராணி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *